மசூதிகள் மற்றும் கோவில்கள் தொடர்பான 500 ஆண்டுகள் பழமையான பிரச்சினைகளை கூட பாஜகவால் தோண்டி எடுக்கிறது. ஆனால் வெறும் 14 ஆண்டுகள் மட்டுமே பழமையான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊழல்கள் சம்பந்தமான பிரச்சினையை பாஜக கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்று ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், “நான் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு என்ன நடந்தது என்பதையும், ஷாருக்கானின் மகனுக்கு என்ன நடந்தது என்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அமலாக்கத்துறையின் விசாரணையில் அவர்களால் எந்த ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் நமபந்தப்பட்ட இடங்களுக்கு ஒருநாளாவது அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டதாக எனக்கு நினைவில்லை என்று ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.
மசூதிகள் மற்றும் கோவில்கள் தொடர்பான 500 ஆண்டுகள் பழமையான பிரச்சினைகளை கூட பாஜகவால் தோண்டி எடுக்கிறது. ஆனால் வெறும் 14 ஆண்டுகள் மட்டுமே பழமையான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊழல்கள் சம்பந்தமான பிரச்சினையை ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்று ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் படி யார் இந்து? – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி
பாஜகவுக்கு இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது. அதை எழுப்பவில்லையென்றால் அவர்களால் தங்கள் கட்சியை நடத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 24 வாரங்களுக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு தரவேண்டிய பணம் எங்களுக்கு கிடைக்கவில்லை. 2021 டிசம்பர் முதல் 2022 மார்ச் வரை, 13 வாரங்களுக்கு, தேவையான பணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்கள் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக மீண்டும் தங்களது பழைய யுக்திகளை கையாளுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்டில் சாதிவாரி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் என்று ஜார்கண்ட் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Source : india today
Defamation Case போட்டு Annamalai ய Court க்கு இழுக்கனும் Vanchi Nathan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.