தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜக விளம்பரப்படுத்துவது என்பது, வகுப்புவாத கலவரத்தை விதைக்கும் அப்பட்டமான முயற்சி என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
தெலுங்கானா பவனில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் ராவ் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், மதவெறியைத் தூண்டுவதை தவிர இந்தத் திரைப்படம் வேறு எதற்கு உதவ போகிறது, வாக்குகளை பெறுவதற்காக இந்து தர்மத்தை பாஜக விற்கிறது இது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய அரசியல் லாபத்திற்காக இந்த திரைப்படத்தை பாஜக பயன்படுத்துகிறது என்பதை காஷ்மீர் பண்டிட்கள் கூட ஏற்க மறுக்கின்றனர். பாஜகவின் நோக்கங்களைக் கண்டிக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளின் காணொளி காட்சிகள் என்னிடம் உள்ளது என்று சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற படங்கள் வகுப்புவாத வெறியை தூண்டி சமூகத்தை பிளவுபடுத்தவே உதவும், ஆகையால் அத்தகைய படங்களை ஊக்குவிக்கக் கூடாது என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு ஏன் விடுமுறை அளிக்க வேண்டும்? அதிலிருந்தே அவர்களின் அரசியல் உள்நோக்கம் தெரிகிறது. தொழில்துறை ஃபைல்ஸ், பொருளாதார ஃபைல்ஸ் போன்ற ஃபைல்ஸ் பற்றி யோசிக்காத பாஜக, ஏன் தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி மட்டும் நினைக்கிறது என்று கேள்வி கேட்டுள்ளார்.
‘பாஜக ஆட்சி டபுள் என்ஜின் கிடையாது; ட்ரபுள் என்ஜின்’ -தெலுங்கானா முதலமைச்சர் கிண்டல்
வகுப்புவாத வெறியைத் தூண்டி சமூகத்தை பாஜக பிளவுபடுத்துவதால்தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் கூட தடை படுகின்றன என்று சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.