ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலால் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சிபிஐ பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
பீகார்: கோயிலுக்குச் சென்ற இஸ்லாமிய அமைச்சர் மீது எஃப்ஐஆர் பதியக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரை பாஜகவில் இணையுமாறு பாஜகவினர் அணுகியதாகவும் அதற்கு மறுத்தால் பொய் வழக்குகள், சிபிஐ விசாரணை, அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று பாஜக மிரட்டியதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது.
அவர்கள் (நான்கு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள்) பாஜகவில் இணைந்தால் தலா 20 கோடி ரூபாயும், மற்ற எம்எல்ஏக்களை அவர்களுடன் அழைத்துச் சென்றால் 25 கோடி ரூபாயும் வழங்கப்படும்” என்று பாஜக கூறியதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் கூறியிருந்தார்.
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தது மனித குலத்திற்கே அவமானம் – பாஜக உறுப்பினர் குஷ்பூ
இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, கெஜ்ரிவாலின் இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் சமீபத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆம் ஆத்மி கட்சியினருக்கு எதிரான நடத்திய சோதனைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.