Aran Sei

மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனக் கூறிய பாஜக எம்.பி – உண்மை நிலவரம் என்ன?

ஆகஸ்ட் 1, 2022 அன்று, ஜார்கண்ட் மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாததால் விவசாயிகள் தற்கொலை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

“கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை குறித்து எதிர்க்கட்சிகள் ஒருமுறையாவது விவாதித்ததுண்டா? அவ்வாறு செய்யவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அர்த்தம். நாங்கள் (பாஜக) விவசாயிகளுக்கு இவ்வளவு அதிகாரத்தை வழங்கியுள்ளோம், இன்று விவசாயிகள் போராடுகிறார்கள். விவசாயியின் நிலை என்ன? மோடியின் அரசு ஆண்டு முழுவதும் ஆட்சியில் இருந்ததால் விவசாயிகளுக்கு அதே அளவு நிதி வழங்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடும் அளவுக்கு விவசாயிகளை பலப்படுத்தினோம், ஆனால் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே வெளியிட்ட அறிக்கையை ஆல்ட் நியூஸ் சரிபார்த்தது,. அக்டோபர் 2021 இல், NDTV இந்தியா , 2020 இல் விவசாயிகள் தற்கொலை பற்றிய அறிக்கையை வெளியிட்டது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையை மேற்கோள் காட்டி, 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன என்று கட்டுரை கூறுகிறது. விவசாயத் துறையில் மொத்தம் 10,677 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 5,579 பேர் விவசாயிகள் மற்றும் 5,098 பேர் விவசாயத் தொழிலாளர்கள். இந்த புள்ளிவிவரங்கள் 2020 ஐ மட்டும் குறிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

துபே தனது அறிக்கையில், நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் எட்டு ஆண்டுகள், அதாவது 2014 முதல் 2021 வரையிலான காலகட்டத்தை குறிப்பிட்டுள்ளார். 2014 முதல் 2020 வரையிலான தரவுகளை ஆய்வு செய்தோம். (2021க்கான தரவுகள் என்சிஆர்பி இணையதளத்தில் இன்னும் கிடைக்கவில்லை.)

உ.பி: சட்டவிரோத ஆயுத வழக்கில் பாஜக அமைச்சர் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம்

2014 இல் மொத்தம் 1,31,666 பேர் தற்கொலை செய்துகொண்டனர் . தரவுகளின்படி, 2014ல் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் . இவற்றுக்கும் 2015 புள்ளிவிவரங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை . அந்த ஆண்டு , 1,33,623 பேர் இறந்ததில் 8,007 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அடுத்த ஆண்டில் மொத்தம் 1,31,008 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களில் 8.7% பேர் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டில் விவசாயத்தில் ஈடுபட்ட 11,379 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களில் 6,270 பேர் விவசாயிகள் என்றும், 5,109 பேர் விவசாயத் தொழிலாளர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது .

என்சிஆர்பி தரவுகளின்படி, 2017ல் மொத்தம் 1,29,887 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 8.2% பேர் விவசாயத் துறையைச் சேர்ந்தவர்கள். விவசாயத் துறையில் பணியாற்றிய 10,655 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 5,955 பேர் விவசாயிகள் மற்றும் 4,700 பேர் விவசாயத் தொழிலாளர்கள்.

இந்தியாவில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது; மோடி அரசை தூக்கி எறிந்தால் ஜனநாயகம் மறுபடியும் மலரும் – புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் விமர்சனம்

இதேபோல், 2018 ஆம் ஆண்டில் , மொத்தம் 1,34,516 தற்கொலை வழக்குகளில், 10,349 விவசாயத் துறையுடன் தொடர்புடையவை. இந்த எண்ணிக்கை மொத்த தற்கொலை வழக்குகளில் 7.7% ஆகும். அதாவது, 2018ல் 5,763 விவசாயிகளும், 4,586 விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டனர். அதே நேரத்தில், 2019 ஆம் ஆண்டில், விவசாயத் துறையில் பணிபுரியும் 10,281 பேர் தற்கொலையால் இறந்துள்ளனர், இது மொத்த புள்ளிவிவரங்களில் 7.4% ஆகும். இவர்களில் 5,957 பேர் விவசாயிகள், 4,324 பேர் விவசாயத் தொழிலாளர்கள்.

ஜூலை 28, 2021 தேதியிட்ட ஆஜ் தக்(Aaj Tak report) அறிக்கையில் , 2017 முதல் 2019 வரையிலான இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயிகள் தற்கொலை குறித்த தரவுகள் உள்ளன. இந்தத் தரவுகளின்படி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகளைப் பதிவு செய்துள்ளன. மகாராஷ்டிராவில், 2017ல் 2,426, 2018ல் 2,239 மற்றும் 2019ல் 2,680 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். கர்நாடகாவில், இந்த எண்ணிக்கை முறையே 1,157, 1,365 மற்றும் 1,331. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பல்வேறு இந்திய மாநிலங்களில் நடந்த விவசாயிகள் தற்கொலைகள் குறித்த data.gov.in இல் இதே தரவைக் காணலாம்.

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

என்சிஆர்பி தரவுகளின்படி, 2014 முதல் 2020 வரை, விவசாயத் துறையில் ஈடுபட்ட 78,303 பேர் தற்கொலையால் இறந்துள்ளனர், அவர்களில் 43,181 பேர் விவசாயிகள். இந்த புள்ளிவிவரங்கள் மக்களவை உறுப்பினர்  நிஷிகாந்த் துபேயின் கூற்றை தெளிவாக மறுக்கின்றன. எனவே, மக்களவையில் ஆதாரம் காட்டாமல் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை எதுவும் நடக்கவில்லை என்று பாஜக உறுப்பினர் கூறியுள்ளார்.

Source: thewire

Recap | கலைஞருக்கு எதிராக சதி செய்த ஊடகங்கள் | Kalaignar Karunanidhi | Kantharaj Interview

மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனக் கூறிய பாஜக எம்.பி – உண்மை நிலவரம் என்ன?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்