Aran Sei

மக்களுக்கான அரசு முதலாளித்துவத்தை ஆதரிக்காது – பாஜக எம்.பி வருண் காந்தி கருத்து

Credit : Hindustan Times

க்களுக்கான அரசு முதலாளித்துவத்தை ஊக்குவிக்காது என பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கூறியுள்ளார்.

வங்கிகள் மற்றும் ரயில்வேதுறையை தனியார்மயமாக்குவது குறித்து பேசிய அவர், “வங்கிகள் மற்றும் ரயில்வேயை தனியார்மயமாக்கினால், 5 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும். இழக்கப்படும் ஓவ்வொரு வேலையிலும் ஒரு குடும்பத்தின் நம்பிக்கை குறைகிறது. மக்கள் நலனிற்காக உழைக்கும் அரசு, முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம் சமத்துவமின்மையை ஊக்குவிக்க முடியாது” என கூறியுள்ளார்.

கே.பி.எஸ்.மணி – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல்

முன்னதாக ஏபிஜி கப்பல் கட்டுமான நிறுவன முறைகேடுகுறித்து கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்த வருண் காந்தி, “விஜய் மல்லையா 9 ஆயிரம் கோடி, நீரவ் மோடி 14 ஆயிரம் கோடி, ரிஷி ஆகர்வால் 23 ஆயிரம் கோடி… கடன் சுமையால் தினந்தோறும் 14 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும்போது, இந்த ஊழல் முறைக்கு எதிராக வலுவான அரசாங்கம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.

Source : Hindustan Times

 

மக்களுக்கான அரசு முதலாளித்துவத்தை ஆதரிக்காது – பாஜக எம்.பி வருண் காந்தி கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்