குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர்களை ஆட்சேர்ப்பு செய்யும் ஒன்றிய அரசின் ‘அக்னிபாத்’ திட்டத்தின் விதிகள் குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இத்திட்டம் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும், ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், ராணுவ வீரர்களின் ஆட்சேர்ப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இளைஞர்கள் தங்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுவார்கள் என்றும் வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
”75 சதவீத வீரர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு “வேலையற்றவர்களாக” மாறுவார்கள். அவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கும், இது இளைஞர்களிடையே மேலும் அதிருப்தியை அதிகரிக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறும் வழக்கமான ராணுவ வீரர்களைக் கூட கார்ப்பரேட் துறை அதிக அளவில் பணியில் அமர்த்திக் கொள்ளாத நிலையில், இந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்
நான்கு வருட ராணுவ சேவை அவர்களின் கல்வியை சீர்குலைக்கும். ஒருவேலை உயர்கல்வி பயிலும்போது மற்றவர்களைவிட வயதானவர்களாக இருப்பதால் அவர்கள் வேறு வேலை அல்லது கூடுதல் கல்வியைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வார்கள். மேலும் நிதி நெருக்கடியையும் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆறு மாத அடிப்படைப் பயிற்சி மட்டுமே கொண்ட இந்த வீரர்கள், தற்போதுள்ள படைப்பிரிவு அமைப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் காரணமாக இருக்கலாம் என்றும் வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீத ‘அக்னிவீரர்கள்’ தொடருவார்கள் என்பதால் இந்தத் திட்டம் பயிற்சிச் செலவை விரயமாக்கும். பாதுகாப்பு துறை பட்ஜெட்டில் தேவையற்ற சுமையாக மாறும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கூறியுள்ளார்.
Source: The New Indian Express
அர்ஜுன் சம்பத்துகளை சங்கிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் | Karu Palaniappan Speech
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.