Aran Sei

மாணவர்களுக்கு வரட்டி செய்ய கற்பித்த பனாரஸ் பல்கலை., பேராசிரியர் – நடவடிக்கை எடுக்க பாஜக எம்.பி. கோரிக்கை

னாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாணவர்களுக்கு மாட்டு சாணத்தில் வரட்டி தயாரிக்கும் முறையை  கற்பித்ததற்காக அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் கவுசல் கிஷோர் மிஸ்ரா மாணவர்களுக்கு மாட்டுச் சாணத்தில் வரட்டி செய்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் காணொளி அண்மையில் வெளியானது.

சமூக ஊடகங்களில் வைரலான அக்காணொளியில், பேராசிரியர் கவுசல் கிஷோர் மிஸ்ரா மாணவர்களுக்கு வரட்டி தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததைக் காட்டுகிறது. கவுசல் கிஷோர் மிஸ்ராவை சில மாணவர்கள் சூழ்ந்திருக்க, அவர்களுக்கு நடுவே அமர்ந்து மிஸ்ரா வரட்டி செய்வதை காணொளியில் காண முடிகிறது.

‘மாடுகளுக்கு ஆம்புலன்ஸ்; அழைத்த 20 நிமிடங்களில் வரும்’- உ.பி கால்நடை துறை அமைச்சர் அறிவிப்பு

இது தொடர்பாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுதப்பட்ட ட்வீட்டில், “பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற பட்டறையில், மாணவர்களுக்கு மாட்டு சாணத்தில் இருந்து வரட்டி தயாரிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று(பிப்பிரவரி 11), மக்களவையில், பூஜ்ஜிய நேரத்தின்போது, இந்த விவகாரத்தை எழுப்பியுள்ள பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் சங்மித்ரா மவுரியா, “ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் பேராசிரியரின் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டது வருந்தத்தக்கது. இச்செயல் கண்டிக்கப்பட வேண்டியது” என்று கூறியுள்ளார்.

கல்வி கோவில்களில் இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பதற்காக பேராசிரியர் கவுசல் கிஷோர் மிஸ்ராமீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

Source: PTI

மாணவர்களுக்கு வரட்டி செய்ய கற்பித்த பனாரஸ் பல்கலை., பேராசிரியர் – நடவடிக்கை எடுக்க பாஜக எம்.பி. கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்