நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி பிரக்யா தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “உண்மையைச் சொல்வது கிளர்ச்சி என்றால், நானும் ஒரு கிளர்ச்சியாளர்” என்று தெரிவித்துள்ளார்.
நபிகள் சர்ச்சை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாத்வி பிரக்யா தாக்கூர், “உண்மையைச் சொல்வது கிளர்ச்சி என்றால், அந்த நாணயத்தால், நானும் ஒரு கலகக்காரன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: நபிகள் குறித்து சர்ச்சையாக பதிவிட்ட பாமக உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்கிய அன்புமணி ராமதாஸ்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது. சனாதன தர்மம் இங்கு நிலைத்திருக்கும்” என்று கூறியுள்ளார்.
நூபுர் ஷர்மாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ”இந்த மத நம்பிக்கை இல்லாதவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் செய்கிறார்கள். கமலேஷ் திவாரி ஏதோ சொன்னதற்காக அவர் கொல்லப்பட்டார். அதேபோல நுபுர் ஷர்மா ஏதோ பேசியுள்ளார் அவருக்கும் கொலை மிரட்டல் வந்தது. நம், தெய்வங்களையும் அதன் மகிமையையும் சிதைத்து அவர்கள் திரைப்படம் எடுக்கிறார்கள். இதை அவர்கள் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள்.. அது அவர்களின் மனநிலையை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
“இது பாரதம் (இந்தியா). இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது, சனாதன தர்மம் இங்கேயே இருக்கச் செய்வது நமது பொறுப்பு, அதைச் செய்வோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி பிரக்யா தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பிறகு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பாஜக கட்சி மேலிடம் தெரிவித்தது.
மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
கியான்வாபி மசூதி விவகாரம்: ஆர்எஸ்எஸ் எனும் சாத்தான் வேதம் ஓதுகிறது
உலக நாடுகளின் கண்டனங்களைத் தொடர்ந்து, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த ஒரு மதத்தையோ ஆளுமைகளையோ அவமதிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாஜக அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Source: ndtv
பத்திரிகையாளரை மிரட்டும் மாஃபியா கும்பல் Isha Yoga Centre | Manoj Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.