Aran Sei

விவசாய சட்டங்களை எதிர்த்து மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

த்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களைத் திருப்பப் பெற கோரி, மேற்கு வங்க சட்டமன்றத்தில்,  ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு  தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

தீர்மானங்களை எதிர்த்த பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஊடகவியலாளர்கள் தாமாக ஆன்லைனில் செய்தி வெளியிட தடை- ஊடகவியலாளர் கூட்டமைப்பு கண்டனம்

தீர்மானத்தை மேற்குவங்க அரசின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி முன்மொழிந்தபிறகு பேசிய மம்தா பானர்ஜி, விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தைப் பிரதமர் மோடி கூட்ட வேண்டும் எனக் கோரியதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

தீர்மானம் முன்மொழிந்ததற்கு பின்னர், கட்டுக்கடங்காத செயல்களில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டதாகவும், மேலும்  அவர்களுக்குத் தலைமை தாங்கிய பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் மனோஜ் டிக்கா, ’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கங்களை எழுப்பியதோடு, சட்டங்களுக்கு எதிராகத் திரிணாமுல் காங்கிரஸ் அரசு “தவறான பிரச்சாரம்” செய்யத் தொடங்கி இருக்கிறது எனக் குற்றம் சாட்டியதாக தி வயர் கூறியுள்ளது.

‘விவசாயிகள் மீதான பாஜகவின் வன்முறை; குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கிறோம்’ – திருமாவளவன்

கடந்த காலங்களில் மத்திய அரசு கார்பரேட் நிறுவங்களுக்கு கடன்களைத் தள்ளுபடி செய்ததை போல விவசாயிகளுக்கும் செய்ய வேண்டும் என  முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று நடைபெற்ற நிகழ்வுக்கு, விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியைக் காவல்துறை தவறாகக் கையாண்டதே காரணம் என்று தெரிவித்த மம்தா “இதற்குக் காவல்துறையை தான் குற்றம்சாட்ட வேண்டும். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். இது முழுமையான உளவுத்துறையின் தோல்வி. நாட்டின் சொத்தான விவசாயிகளை, துரோகிகள் என்று கூறுவதை ஏற்க முடியாது” என அவர் கூறியதாக, அந்தச் செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் ராமர் கோவிலுக்கு முதல் பரிசு – பாதுகாப்புத்துறை அறிவிப்பு

சித்தாந்த வேறுபாடுகளை மறந்து, விவசாய பிரச்னைகளுக்கான ஒன்றிணைய காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளுக்கு மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார், என தி வயர் கூறியுள்ளது.

விவசாய சட்டங்களை எதிர்த்து மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்