Aran Sei

தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் தேசத்திலிருந்தே தூக்கிய எறியப்படும் – மம்தா பானர்ஜி

credits : pti

மேற்கு வங்கத்தில், மக்கள் பாஜகவை தோல்வி அடையச் செய்தால், தேசத்திலிருந்தே பாஜக தூக்கியறிப்படும் என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், நிலக்கரி மோசடி வழக்கில் (மம்தா பானர்ஜியின் மருமகன்) அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜி, சிபிஐயால் விசாரிக்கப்பட்டதை குறிப்பிட்டு, ஹூக்லி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, ”நீங்கள் என் வீட்டிற்குள் நுழைந்து எங்களது இளம் மகள்களையும் மருமகள்களையும் குறி வைக்கிறீர்கள். அவர்களும் நிலக்கரி மோசடியில் ஈடுபட்டார்களா?” என மம்தா கேள்வியெழுப்பியுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர், அம்மாநிலத்தில்  பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த மம்தா, பாஜக ஆளும் மாநிலங்களில் தான் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என கூறியுள்ளார் என தி இந்து தெரிவித்துள்ளது.

திரிணாமுல் எம்.பி வீட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜி – சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில் வருகை

பாஜக தலைவர்களை ராவணனுடன் ஒப்பிட்டு பேசிய மம்தா, பாஜக லஞ்சம் மற்றும் ஊழலில் மூழ்கி இருப்பதாகவுவும், கட்சியே ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து தான் இயக்கப்படுதவாகவும் மம்தா குற்றம் சாட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை’ – பாஜகவை எச்சரித்த மம்தா பானர்ஜி

பாஜக உறுப்பினர் என்றாலே கலவரக்காரர்கள் என கூறியுள்ள மம்தா ”இனிமேல் தான் விளையாட்டு விளையாடப்படும். இந்த விளையாட்டில் நீங்கள் அவர்களை தோல்வியடையச் செய்தால், தேசத்திலிருந்தே அவர்கள் தூக்கியறியப்படுவார்கள்” என மம்தா கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

என்னைப் பற்றி பேசும் முன் உங்கள் மகனைப் பாருங்கள்: அமித் ஷாவிற்கு மம்தா பானர்ஜி பதிலடி

”இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India) ஏன் விற்பனை செய்யப்படுகிறது ? ரயில்வேத்துறை ஏன் தனியார்மயம் நோக்கி நகர்கிறது ? விவசாயிகள் ஏன் வீதிகளில் இருக்கிறார்கள்? ” என்பதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என மம்மதா கூறியதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் தேசத்திலிருந்தே தூக்கிய எறியப்படும் – மம்தா பானர்ஜி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்