மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, 7 மாநகராட்சிகள், 109 நகராட்சி கவுன்சில்கள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 9,222 வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்த தேர்தலில், 71.39 சதவீதம் வாக்குப்பதிவானது.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சுயேட்சை வேட்பாளர்கள் 2,832 பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் 2,037 பேரும், ஷிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் 1,569 பேரும், பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் 1,103 பேரும், வெற்றி பெற்றுள்ளனர்.
‘மொத்த நாடும் உங்களுக்கு நன்றி சொல்லும்’ – பிரதமரின் தாயாருக்கு எழுதப்பட்ட பஞ்சாப் விவசாயின் கடிதம்
மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் (மோகா, ஹோஷியார்பூர், கபுர்தலா, அபோஹர், பதான்கோட், படாலா பதீண்டா) காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளது. மொஹாலியின் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த 53 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவந்த பதீண்டா மாநாகராட்சியை, முதல் முறையாக காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
History has been made today!
Bathinda will get a Congress Mayor for the 1st time in 53 years!
Thank you to ALL Bathinda residents.Congratulations to the people of Bathinda for a spectacular victory.
Kudos to all Congress candidates and workers, who toiled for this day. pic.twitter.com/Xvczq5MjfU— Manpreet Singh Badal (@MSBADAL) February 17, 2021
இது தொடர்பாக பதீண்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பஞ்சாப் நிதி அமைச்சருமான மன்ப்ரீத் சிங் பாதல், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 53 ஆண்டுகளில் முதல் முறையாக பதீண்டா, காங்கிரஸ் மேயரைப் பெறப்போகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இது காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிக்கும் நிலையில், கிராமங்களில் மிகப் பெரிய வாக்கு வங்கியை கொண்டுள்ள பாஜகவுக்கு இது மிகப் பெரிய பின்னடைவு என்று, என்டிடிவி தெரிவிக்கிறது.
முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் ஷிரோமணி அகாலி தளத்தின் கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. ஆனால், பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து ஷிரோமணி அகாலி தளம் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.