பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஒரு ‘கலப்படமான அரசு’ என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பணமதிப்பிழப்பு போன்ற முடிவுகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிக்கிறது. எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் பாஜக செயலிழக்கும் என்று மம்தா பானர்ஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஒரு ‘கலப்படமான அரசு’. பணமதிப்பிழப்பு போன்ற பேரழிவு முடிவுகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. இது ஒரு பெரிய ஊழல் என்று புருலியா மாவட்டத்தில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் தொழிலாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியுள்ளார்.
மக்கள் விரோத அரசாங்கத்தால் நாட்டின் குடிமக்கள் சோர்வடைந்துள்ளனர் என்று அவர் தெரித்துள்ளார்.
“2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.முழுவதும் தோற்கும் என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று கூறியுள்ளார்.
Source: newindianexpress
நாக்க அடக்கி பேசுங்க Annamalai Journalist Protest Against Annamal
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.