இந்தியாவை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இங்கிலாந்தின் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் சர்வதேச ஆங்கில செய்தி நிறுவனம் பிபிசி. இந்த செய்தி நிறுவனத்தின் கிளை இந்தியாவில் மும்பை, டெல்லியில் உள்ளது.
இதனிடையே, டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஆய்வு செய்தது. 59 மணி நேரம் நடந்த ஆய்வு கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இந்த ஆய்வில் பிபிசி நிறுவனம் முறையாக வருமான வரி கட்டவில்லை என்றும், லாபத்திற்கு சரியாக கணக்குகாட்டவில்லை என்றும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நிதிக்கு சரிவர வருமான வரி கட்டவில்லை என்றும் வருமானவரித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளை, டெல்லி, மும்பை பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதை எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன.
இந்நிலையில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. பிபிசி-க்கு என்ன நடந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். குஜராத்தில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். இந்த நாட்டை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது’ என்று கூறியுள்ளார்.
Source : the print
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.