Aran Sei

‘விவசாய சங்கத்தை உடைப்பதற்காக பாஜக என்னைக் கொல்ல முயற்சிக்கிறது’ – ராகேஷ் தியாகத் குற்றச்சாட்டு

பாஜக தன்னை கொலை செய்யச் சதி செய்து வருவதாக பாரதிய கிஷான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் கர்நாடகாவில் என் மீது கருப்பு மை தாக்குதல் நடத்தப்பட்டதை “நன்கு திட்டமிடப்பட்ட சதி” என்று தியாகத் தெரிவித்துள்ளார்.

கருப்பு மை வீசியோ, கொடிய தாக்குதல் நடத்தியோ விவசாயிகளின் குரல்களை நசுக்க முடியாது – விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத்

“எனது குடும்பத்தையும், எனது விவசாய சங்கத்தையும் உடைப்பதற்காக அரசாங்கம் என்னைக் கொல்ல விரும்புகிறது. ஆனால் இது ஒருபோதும் நடக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி ‘சதிகாரர்களால்’ சுட்டுக் கொல்லப்பட்டதைப் போலவே, நாட்டிற்காகவும் நாட்டின் விவசாயிகளுக்காகவும் குரல் எழுப்பும் மக்கள் ‘சதிகாரர்களின்’ இலக்காக உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு தியாகத்துக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், லட்சக்கணக்கான தியாகத்துக்கள் நாட்டில் புரட்சி கொடியை உயர்த்தத் தயாராக உள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.

Source : newindianexpress

கண்ணீர்விடும் Kashmiri Pandit கள் கண்டுகொள்ளாத Amit Shah | Thiyagu Interview

‘விவசாய சங்கத்தை உடைப்பதற்காக பாஜக என்னைக் கொல்ல முயற்சிக்கிறது’ – ராகேஷ் தியாகத் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்