ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நல பாதிப்பிலிருந்து மீண்டு வந்து மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கியுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளம் மாநிலங்களவை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
“எனது சித்தாந்தத்தில் உறுதியாக நிற்கிறேன். பல கட்சிகள் பாஜகவுடன் சமரசம் செய்துகொண்டு மண்டியிட்டுள்ளன. ஆனால் நான் தலைவணங்க போவதில்லை. இப்போதில்லை எப்போதும் அடிபணிய மாட்டேன். பாஜக தான் எங்களின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு நான் அடிபணிந்திருந்தால் இவ்வளவு நாள் சிறையில் இருந்திருக்க மாட்டேன்” என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், 2024ல் பாஜகவை வேரோடு தூக்கி எறிய வேண்டும். விரைவில் டெல்லி சென்று சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்திப்பேன்.” என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
Source : the print
Rangaraj Pandeyக்கு கண்ணு தெரியலயா? | படிச்சாதானே புரியும்! Thinakara Gyanaguru அதிரடி
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.