பாஜக தலைவர்கள் தாஜ்மஹாலின் கீழ் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழை தேடுகிறார்கள் என்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹாலில் சீல் வைக்கப்பட்ட 22 அறைக் கதவுகளை திறக்க இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும். தாஜ்மஹாலின் தவறான வரலாறு தொடர்பான அடிப்படை உண்மைகளைக் கண்டறிய ஒரு ’உண்மை கண்டறியும் குழு’வை உருவாக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் அயோத்தி பகுதி ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “இன்று இந்த அறையைத் திறக்கச் சொல்கிறீர்கள். நாளைக்கு வந்து நீதிபதிகளின் அறையைத் திறக்கச் சொல்வீர்களா?” என்று கேள்வி எழுப்பியது.
மேலும் ”தயவு செய்து பொதுநல மனுவைக் கேலி செய்யாதீர்கள்” என்றுகூறி இந்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் மே 12 அன்று தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்தியத் தொல்லியல் துறை தனது பருவ இதழில் தாஜ்மகாலில் உள்ள அறைகளின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என்று இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள அந்த அறைகளைப் பராமரிக்கும் பணி நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை: இந்தியத் தொல்லியல் துறை தகவல்
இந்நிலையில் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ள இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்குச் சொந்தமானது, பின்னர் அதை ஷாஜகான் அபகரித்துக் கொண்டார் என்று ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான தியா குமாரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
தாஜ்மஹால் தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கி வரும் வேளையில் “பாஜக தலைவர்கள் தாஜ்மஹாலின் கீழ் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை தேடுகிறார்கள் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
Source : financialexpress
Defamation Case போட்டு Annamalai ய Court க்கு இழுக்கனும் Vanchi Nathan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.