Aran Sei

பீகாரில் கள்ளச்சாராய விற்பனையில் பாஜகவினர் தான் ஈடுபடுகின்றனர் – முதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சட்டசபையில் ஆளுங்கட்சி, பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நீங்கள்தான் குடிகாரர் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து சட்டப்பேரவையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தின் சப்ரா பகுதியில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது தொடர்பாக, சட்டப்பேரவையில் நேற்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் பேரவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

குற்றங்களை தடுக்க மதுவுக்கு பதிலாக கஞ்சா பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் – சத்தீஸ்கர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேச்சு

பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜய் குமார் சின்ஹா சட்டப்பேரவையில் பேசும்போது, “2016 முதல் பீகார் மாநிலத்தில் மது விற்பனை, மது நுகர்வுக்குத் தடை உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. கள்ளச்சாராயம் குடித்து அடிக்கடி பலர் உயிரிழப்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் சப்ரா பகுதியில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்புக்கு முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசுதான் காரணம்” என்றார்.

விஷ சாராய விற்பனையை அரசு தடுக்கத் தவறிவிட்டதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து நீங்கள்தான் குடிகாரர் என்று சத்தமிட்டார். மேலும் பீகாரில் விஷ சாராய விற்பனையில் எதிர்க்கட்சியினர்தான் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மது அருந்தக்கூடாது எனும் காந்தியக் கொள்கையை நிராகரிப்பவர்கள் இந்தியர்கள் அல்ல பாவிகள் – பீகார் முதலமைச்சர்

இதனால், பேரவைக்குள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேறி பேரவை வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் சப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்கள் சப்ரா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, மது விற்பனை மற்றும் மது நுகர்வுக்கு தடை விதித்தது. அதன்பின் கள்ளச் சாராய விற்பனை அதிகரித்து அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அதனால் மதுவிலக்கை தாண்டி உயிர்ப்பலிகள் தொடர்கின்றன. அங்குள்ள சரன் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு சுமார் 50 பேர் விஷ சாராயத்தால் உயிரிழந்திருக்கின்றனர்.

வரதட்சணை வாங்குவதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து

சரண் மாவட்டத்தில் தோய்லா, யாது மோட் கிராமங்களில் அனுமதியின்றி விற்கப்பட்ட கள்ளசாராயத்தை வாங்கி பலர் குடித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு உடனடியாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 21 பேர், நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் உயிரிழந்தனர். மேலும் பலருக்குப் பார்வையிழப்பு ஏற்பட்டது.

Source : the print

Approach of Courts in the four Cases | Bilkis Bano | Yashwant Shinde | Lakhimpur kheri | Umar Khalid

பீகாரில் கள்ளச்சாராய விற்பனையில் பாஜகவினர் தான் ஈடுபடுகின்றனர் – முதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்