சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்திப் பதற்றத்தை உருவாக்குகிறது பாஜக என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இணையவழியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “சாதி மற்றும் பிராந்தியவாதத்தின் பெயரால் சில எதிர்க்கட்சிகள் மக்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மோடியின் கருத்திற்குப் பதிலளித்த ராஜஸ்தான் முதலமைச்சர், “மக்களை தூண்டிவிட்டுத் திட்டமிட்ட முறையில் கலவரங்களை பாஜக உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் கூறிய கருத்துக்களைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். மக்களைத் தூண்டி விடுவது, பிளவுபடுத்துவது, பதற்றத்தை உருவாக்குவது என்பது அவர்களின் (பாஜக) வேலை” என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
மக்களைப் பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறும் பாஜக – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சனம்
மேலும் பிரதமர் மோடி இவ்வாறு பேசுவது என்பது அவரின் திமிரைத்தான் காட்டுகிறது என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
Source : thehindu
சவுக்கை சுழற்றும் நெஞ்சுக்கு நீதி | Nenjukku Neethi Review | Udhayanidhi Stalin
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.