Aran Sei

கலவரம் நடைபெற்ற பகுதியில் ராமர் கோவில் கட்ட நிதி வசூல் – டெல்லி பாஜக திட்டம்

டெல்லியில் கவவரம் நடைபெற்ற இடங்களில், ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டும் ரத யாத்திரை நடைபெறும் என்று, டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி நிர்மாண் நிதி அபியான் என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்த ரத யாத்திரையின் போது, மாற்று மதத்தினரிடமும் நிதி வசூலிக்கப்படும் என்று திவாரி கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியின்படி, சிறுபான்மையினரும், ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி வழங்க விரும்புவதாக மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம் “தன்னெழுச்சியானது” – உள்துறை அமைச்சகத்தின் மீளாய்வு!

பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ரத யாத்திரை, டெல்லி கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சாந்த் பாக் உட்பட, பல்வேறு இடங்களில் நடத்தப்படவுள்ளதாக தி வயர் கூறுகின்றது. ரத யாத்திரையின் முதல் நாளே, யமுனா விஹார் மற்றும் சாந்த் பாக் பகுதிகளின் வழியாக யாத்திரை செல்லும் என்று, மனோஜ் திவாரியின் உதவியாளர் நீல்கண்ட் பக்ஷி தி வயர் -யிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி கலவரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட, கபில் மிஷ்ரா போன்ற பாஜக தலைவர்களும் இந்த ரத யாத்திரையில் கலந்துகொள்ள உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலவரம் – விசாரணைக் குழு போலீசாரில் 4 பேருக்கு பதவி உயர்வு

டெல்லி கலவரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த டெல்லி சிறுபான்மை ஆணையம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட சில பாஜக தலைவர்களின் ‘மோதல் உருவாக்கும் வகையிலான’ பேச்சுக்களை சுட்டிக்காட்டியுள்ளது.

“2020ஆம் ஆண்டு, பிப்ரவரி 23ஆம் தேதி, கபில் மிஷ்ரா பேசிய சில மணி நேரத்தில், வட கிழக்கில் டெல்லியில் உள்ள, ஷிவ் விஹார், கஜூரி காஹ்ஸ், சந்த் பாக், கோகுல்புரி, மவுஜ்பூர், கரவால் நகர், ஜஃப்ராபாத், முஸ்தபாபாத், அஷோக் நகர், பஹிரதி விகார், பஜன்புரா, கர்டம் புரி ஆகிய இடங்களில் கலவரம் தொடங்கியது” என்று சிறுபான்மை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்றாடம், சமூகத்தில் நிகழும் அனைத்துபிரச்சனைகளுக்கும் பின்னாள் உள்ள அரசியலை முழுமையாக புரிந்துகொள்ள, அரண்செய் யூடியூப் சேனலை பின் தொடருங்கள் என அன்போடு அழைக்கிறோம். 

கலவரம் நடைபெற்ற பகுதியில் ராமர் கோவில் கட்ட நிதி வசூல் – டெல்லி பாஜக திட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்