Aran Sei

பாஜக ‘கலவர அரசியலை’ செய்து மக்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகிறது: டெல்லி துணை முதலமைச்சர் கருத்து

பாஜக ‘கலவர அரசியலை’ செய்து மக்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகிறது என்று டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக ஆட்சி செய்யும் இமாச்சல பிரதேசத்தில் கல்வி முறை சீர்குலைந்துள்ளது. ஏனெனில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு இல்லை மற்றும் தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் தனியார்ப் பள்ளிகளில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏனெனில் மாநில அரசு மக்களைக் கொள்ளையடிக்க தனியார்ப் பள்ளிகளுக்குச் சுதந்திரம் வழங்கியுள்ளது” என்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

அசைவ உணவு சாப்பிடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதன் மூலமும், தனியார்ப் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிப்பதன் மூலமும் கடந்த 5 ஆண்டுகளில் டெல்லியின் கல்வித் தரத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்த்தியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சி இங்கு ஆட்சி அமைத்தால் தரமான கல்வி வழங்கப்படும் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

பாஜகவை திமுக மிகச் சரியாக எதிர்க்கிறது Jenram Interview

பாஜக ‘கலவர அரசியலை’ செய்து மக்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகிறது: டெல்லி துணை முதலமைச்சர் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்