தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதை சுட்டிக்காட்டி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. கட்சியை மாவோயிஸ்டுகளை விடவும் ஆபத்தானவர்கள் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.
‘இஸ்லாமிய பயங்கரவாதியான மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் தஞ்சம் புக வேண்டிவரும்’ – பாஜக
இன்று புருலியா என்ற மாவட்டத்தில் பேரணியொன்றை நடத்திய மம்தா, அப்போது இவ்வாறு கூறியிருக்கிறார். அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியிலிருக்கும் பல தலைவர்கள் பாஜக-வில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய மம்தா, “பா.ஜ.க.வில் இணைய விரும்புபவர்கள், தாராளமாக அதில் இணையலாம். ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… நாங்கள் எப்போதும் காவி கூட்டத்துக்கு தலைவணங்க மாட்டோம். பாஜக தலைவர்கள், புருலியா பகுதியில் இருக்கும் ஜங்கல்மஹால் பகுதி ஆதிவாசிகளை தவறாக வழிநடத்துகின்றனர். அப்பகுதி மக்களுக்கு நிறைய போலி வாக்குறுதிகள் தருகின்றனர். 2019 ம் ஆண்டு, மக்களவை தேர்தலிலேயே அவர்கள் இதைத்தான் செய்தனர்” என்று கூறியிருக்கிறார்.
வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக யாருடைய கட்சி வெளியேறுகிறது என்பதைக் காண்போம் என்று கூறிய அவர், அரசியல் என்பது ஒரு தனித்துவமான சித்தாந்தம் மற்றும் தத்துவம் என்றும், ஒருவர் தினமும் உடைகள் போன்ற சித்தாந்தங்களை மாற்ற முடியாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.