Aran Sei

கூட்டணி கட்சிக்கே துரோகம் செய்யும் பாஜக: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் பெரும் பெரும்பான்மையுடன் பாஜகவை வெல்லலாம் – நிதிஷ்குமார்

பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்து கூட்டணி சேர ஒப்புக்கொண்டால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து “பெரும் பெரும்பான்மையுடன்” நாம் வெற்றி பெற முடியும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

நிதீஷ் குமார் அண்மையில் பல எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களம் காண ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளின் கூட்டணியை ஒன்றிணைக்க முயல்கிறார்.

என் வாழ்நாளில் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதிலும், 2020 சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக பாஜக செயல்பட்டதாக நிதிஷ்குமார் குற்றம் சாட்டினார். “2005 அல்லது 2010 சட்டமன்றத் தேர்தல்களில் எங்கள் கட்சி இதற்கு முன்பு ஒருபோதும் குறைவான இடங்களை வென்றதில்லை என்பதை அவர்களுக்கு (பாஜக) நினைவுபடுத்த விரும்புகிறேன். 2020 ஆம் ஆண்டில், எங்கள் வேட்பாளர்களை தோல்வியடைய செய்ய அவர்கள் (பாஜக) வேலை செய்ததால் நாங்கள் பாதிக்கப்பட்டோம், “என்று பாஜகவை நிதிஷ்குமார் மறைமுகமாக சாடினார்.

ஆனால் பீகாருக்கு (ஒன்றிய அரசாக உள்ள பாஜக அரசாங்கத்திடமிருந்து) எதுவும் கிடைக்கவில்லை. சிறப்பு அந்தஸ்து கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவர் (பிரதமர் நரேந்திர மோடி) ஆங்கிலேய ஆட்சியிலிருந்து வந்த ஒரு வளமான மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏழைகளை முன்னேற்றாமல் நாடு முன்னேற முடியாது, “என்று நிதிஷ்குமார் கூறினார்.

Source : NDTV

Experience of Designing BiggBoss Vikraman | Designer Sindhu | Aruntamizh Yazhini@VijayTelevision

கூட்டணி கட்சிக்கே துரோகம் செய்யும் பாஜக: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் பெரும் பெரும்பான்மையுடன் பாஜகவை வெல்லலாம் – நிதிஷ்குமார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்