காங்கிரஸின் கொள்கையைப் பார்த்து பாஜக பயப்படுகிறது என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு பின் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “புலனாய்வுத்துறை, அமலாக்கத் துறை பற்றி எல்லாம் புதிதாக கருத்து சொல்ல ஒன்றுமில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ஷாரூக்கான் மகனுடைய வழக்கு எந்த விதத்தில் முடிந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இன்று ஜார்க்கண்ட் முதலமைச்சர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை தலைவர் சவுத்ரி சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதையெல்லாம் வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சாதாரண மக்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டனர். நீங்களும் ஒரு முடிவுக்கு வாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு உங்களைப்பார்த்து பயமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “என்னை பார்த்து பயப்பட சிங்கமா புலியா, நான் ஒரு மனிதன். காங்கிரஸ் கட்சியை பிரதிபலிக்கும் மனிதன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அழுத்தமாக, உரத்த குரலில் சொல்லி வருபவன். என்னை பார்த்து பயப்படுவதாக நினைக்கவில்லை. காங்கிரஸின் கொள்கையைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள்.
என்னை விட தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் தேர்வு குறித்து நான் எப்படி கருத்து சொல்ல முடியும்” என தெரிவித்துள்ளார்.
Source: Thetimesofindia
Annamalai மாதிரி மிரட்டுன அரசியல்வாதிகள் காணாம போயிருக்காங்க | Annamalai Press Meet
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.