நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் கடந்த எட்டு ஆண்டுக்கால ஆட்சி தொடர்ச்சியான ‘தோல்விகளால்’ நிறைந்துள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம், அதிக வேலையின்மை விகிதம் மற்றும் கட்டுப்பாடற்ற வெறுப்பு அரசியல் ஆகியவை அந்த தோல்விகளில் முக்கியமானவை என்றும் தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபேஸ் கூறுகையில், 2022 மே 26 அன்று பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தனது ஆட்சியின் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
“அதிகரித்து வரும் பணவீக்கம், அதிக வேலையின்மை, “ஜனநாயகத்தை ஒடுக்குதல்”, தேசியப் பாதுகாப்பைப் பாதுகாக்கத் தவறியது, வெறுப்பு அரசியல், ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத சரிவு, பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியாவின் சமூக கட்டுமானத்தைச் சிதைத்தல் ஆகியவை பாஜக அரசின் எட்டு “தோல்விகள்” என்று மகேஷ் தபேஸ் பட்டியலிட்டுள்ளார்.
“பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 8 ஆண்டுக்கால ஆட்சியில் இந்தியா நிறைய இழப்பைச் சந்தித்துள்ளது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீரழித்துள்ளது. அறிவியல் மற்றும் சமத்துவத்துவத்திற்கு பதிலாக மதமும் இனமும் இங்கு ஆட்சி செய்கின்றன” என்று மகேஷ் தபேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
Source : NDTV
Nenjukku Needhi I கை கொடுத்தா தீட்டு, கை கொடுக்க கூடாது I VCK Sanga Tamizhan I Jamadagni
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.