எய்ம்ஸ் விவகாரத்தில் பாஜக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. ஒன்றாக அறிவித்த 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றை திறந்து வைத்துள்ளனர். மதுரையில் சுவர் கூட கட்டவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், பிரதமரின் பெயரில் உள்ள திட்டங்களில் மாநில அரசு நிதியின் பங்களிப்பே அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் 75 விழுக்காடு பங்குடன் தொடங்கப்படும் ஒன்றிய அரசின் பல திட்டங்களுக்கு படிப்படியாக நிதி குறைக்கப்படுகிறது. மாநில அரசு 80 விழுக்காடு நிதி வழங்கும் போது திட்டத்தின் பெயர் மட்டும் பிரதான் மந்திரி என்று உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மதுரை: 95% கட்டிமுடித்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணவில்லை – சு. வெங்கடேசன் கிண்டல்
திமுகவில் நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே. அரசாங்கம் சார்பாக நிதியமைச்சர் என்ற முறையில் பல இடங்களில் கருத்துகளை கூறினேன். கட்சி கருத்தை மூத்த நிர்வாகிகள் கூறுவார்கள்.
குதிரைப்பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்காக அறிக்கை தயாராகாததால் ஜி.எஸ்.டி. கூட்டத்தை நடத்த முடியவில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை விரைவாக நடத்த ஒன்றிய நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Ponniyin Selvan Decoded | Nathan Explains Manirathnam’s Cinema Politics | Vaathi Raid | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.