Aran Sei

வேலையின்மை, சீன ஊடுருவல் போன்ற பிரச்சினைகளை ராகுல்காந்தி எழுப்பியதால் பாஜக பயப்படுகிறது – காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சனம்

வேலையின்மை, பணவீக்கம் மற்றும் சீன ஊடுருவல் உள்ளிட்டவை குறித்து ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியதால்தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுர்ஜேவாலா, “ராகுல் காந்தியின் வலுவான குரலுக்கு பாஜக ஏன் பயப்படுகிறது? சீனா ஊடுருவல் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். ஆனால், சீனாவை ஒன்றிய அரசால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று விமர்சித்துள்ளார்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றில் மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்பி வருகிறார். அதனால்தான் ராகுல் காந்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற கேள்விகளை எழுப்புவதற்கு ஒன்றிய அரசின் செயல்படாத தன்மையே ஆகும் என்று சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயின்போது ஒன்றிய அரசின் தவறான நிர்வாகத்தை ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார். மேலும், இலவச தடுப்பூசிகளை வழங்க  மோடி அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியதால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Thenewindianexpress

Bulldozer- ஐ வெச்சே ஆட்சி நடத்தும் BJP | Yogi Adityanath | Nupur Sharma

வேலையின்மை, சீன ஊடுருவல் போன்ற பிரச்சினைகளை ராகுல்காந்தி எழுப்பியதால் பாஜக பயப்படுகிறது – காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்