விவசாயிகளின் போராட்டத்தால் பாஜகவிற்கு பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, வரும் உத்தரபிரதேச தேர்தலிலும் தொடரும் என்று போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பாரதிய கிசான் யூனியனின் உறுப்பினரும், உத்தரபிரதேசம் மாநிலம் மோடிநகரை சேர்ந்த விவசாயிமான ஒருவர் “நாங்கள் பாஜக-விற்கு வாக்களித்து பெரும் தவறை செய்துவிட்டோம். இனி அத்தவறை செய்ய மாட்டோம். இந்த மூன்று விவசாய சட்டங்களும், பாஜகவிற்கு மூடு விழாவை நடத்தும்.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ராஜிவ் குமார், “நாங்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக, இப்போராட்டக் களத்தில் இருக்கிறோம். இதன் காரணமாகவே, பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாஜக துடைத்தெறியப்பட்டுள்ளது. வரும் உத்தரபிரதேச தேர்தலிலும் இது தொடரும்.” என்று கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்த கோதுமை விவசாயியான ராஜேந்தர் சிங் , “தற்போது வரை நடந்து முடிந்த 11 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. அவர்களுக்கு இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இந்த சட்டங்கள் விவசாயிகளை மரண குழிக்கு தள்ளும்.” என்று கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.