தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பேச்சை திருத்தி அவரை “இந்து வெறுப்பாளர்” என்று சித்தரிக்கும் வகையில் பதிவேற்றியதற்காக பாஜக மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மும்பை காவல்துறையின் சைபர் பிரிவில் தேசியவாத காங்கிரஸ் இளைஞர் பிரிவின் மாநிலத் தலைவர் புகாரளித்துள்ளார்.
சரத்பவார் பேசிய உரையின் ஒரு பதியை வெட்டி அதைத் திருத்தி (EDIT) @BJP4Maharashtra ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில்,”நாத்திகர் சரத்பவார் எப்போதும் இந்து மதத்தை வெறுக்கிறார். அத்தகைய நிலைப்பாட்டை எடுக்காமல் அவர் தனது அரசியல் வெற்றியை அடைந்திருக்க மாட்டார்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
சில சமூக ஊடக பயனர்கள் இது திருத்தம் (EDIT) செய்யப்பட்ட காணொளி என்றும், மே 9 ஆம் தேதி சதாராவில் நடந்த ஒரு நிகழ்வில் சரத்பவார் ஆற்றிய உரையில், சாதிவெறி மற்றும் தீண்டாமையை எதிர்க்கும் ஜவஹர் ரத்தோட்டின் கவிதையைக் குறிப்பிட்டு பேசியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் இளைஞர் பிரிவின் மாநில தலைவர் சூரஜ் சவான் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில், “ட்விட்டரில் இதுபோன்ற ஒரு காணொளியைப் பகிர்வதன் மூலம் சமூகங்களில் பிளவை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 499, 500, 66A மற்றும் 66F இன் படி பாஜகவின் ட்விட்டர் பதிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஹரியானா: மதராஸாக்களில் தேசிய கீதம் கட்டாயமாக்கப்படலாம் – மாநில கல்வி அமைச்சர் பேச்சு
பாஜகவின் ட்விட்டர் பதிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், “தொழிலாளர் வர்க்கத்தின் வலியை சித்தரிக்கும் கவிதையைத்தான் படித்தேன். ஆனால் சிலர் தவறான தகவல்களை பரப்ப விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Source: The New Indian Express
தமிழ்நாடு முழுக்க அரசு Beef Biriyani திருவிழா நடத்தணும் | Sundharavalli
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.