அக்னிபத் திட்டத்தின் வழியாக பாஜக தனது சொந்த “ஆயுதப் படையை” உருவாக்க முயற்சிக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜவிற்கான வாக்குகளை கொள்ளையடிக்க குண்டர்களை உருவாக்குவதற்கான “லாலிபாப் திட்டம்” என்றும் அவர் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்? இது இராணுவத்தால் வழங்கப்படும் பயிற்சி அல்ல, மாறாக ஆயுதப் பயிற்சியாகும். அவர்களுக்கு ஆயுத உரிமம் கிடைக்கும். இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை வழங்க பாஜக விரும்புகிறது” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டு சேவை காலத்திற்குப் பிறகு, ‘அக்னி வீரர்களை தனது கட்சி அலுவலகங்களில் “வாட்ச்மேன்களாக” நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளதா என்றும் மம்தா பானர்ஜி ஆச்சரியப்பட்டார்.
பாஜக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து மக்களை முட்டாளாக்கினர். ஆனால் இப்போது அவர்கள் இந்த மாதிரியான திட்டங்களின் மூலம் நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
Source : NDTV
Army Man Interview on Agnipath | பாஜக செய்வது தேசபக்தியா தேசத்துரோகமா?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.