Aran Sei

இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

ஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்துவதென்று பாஜக முதலமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போடுகின்றனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று (மே 22) ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசியபோது, “மதரஸா என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டும்” என்று தெரிவித்ததற்கு இன்று (மே 23) மெகபூபா முப்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ‘மதச்சார்பற்ற தன்மையை’ தகர்த்து ‘பல மினி பாகிஸ்தான்களை’ பாஜக உருவாக்குகிறது – மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

“இஸ்லாமியர்களை யார் அதிகம் துன்புறுத்த முடியும் என்று பாக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போடுகிறார்கள். எனவேதான், கோவில்கள் மற்றும் மசூதிகளின் பிரச்சினைகள் எழுப்பப் படுகின்றன. குஜராத் மாடல், உ.பி மாடல், அசாம் மாடல், ம.பி மாடல் என, மொத்த இந்திய நாட்டையும் மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆங்கிலேயர்கள் இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறுத்தினார்கள், இன்று பாஜக அதைச் செய்கிறது. அதனைப் பிரதமர் மோடி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பாஜக அவர்கள் செய்வதுதான் சரியானது நினைக்கிறது. இந்தியாவின் அரசியலமைப்பு தற்போது பிளவுபட்டு வருகிறது.

Source : India Today

ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan

இஸ்லாமியர்களை துன்புறுத்த பாஜக முதல்வர்கள் போட்டிப்போடுகிறார்கள்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்