மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் சந்தனகரில், பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இதில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து ஆதிகாரி, ஹூக்ளி மக்களவை உறுப்பினர் லாக்கெட் சாட்டர்ஜி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, பேரணியில் கலந்துக்கொண்ட உள்ளூர் பாஜகவினர், “வங்காள துரோகிகளை சுட்டுக்கொல்ல வேண்டும்.” என்று முழக்கம் எழுப்பியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் இந்த முழக்கத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர்கள், “தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை இராணுவம் சுட்டுக்கொல்ல வேண்டும்.” என்று கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், “தலைமை எதை பிரச்சாரம் செய்கிறதோ, அதைத் தான் கட்சியினர் கடைப்பிடிப்பார்கள்.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (ஜனவரி 19), கொல்கத்தாவில் நடந்த திரிணாமூல் காங்கிரஸ் பேரணியிலும் இதே போன்று முழக்கம் எழுப்பட்டதை, பாஜக கடுமையாக கண்டித்திருந்தது.
மக்களுக்காகத் தொடர்ச்சியாகப் போராடுவேன் – ’திரிணாமுல்’ 23 வது ஆண்டு விழாவில் மம்தா பானர்ஜி
கடந்த இரண்டு நாட்களாக, கொல்கத்தாவிலும், கிழக்கு மெதினாபூரிலும் நடந்த பாஜகவின் நிகழ்ச்சிகளின் போது, இரு கட்சிகளின் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறியுள்ளது.
பழங்குடியினர் வீட்டில் `லஞ்ச்’ – மேற்கு வங்கத்தில் அமித் ஷா புது வியூகம்
இந்நிலையில் “தேச துரோகிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்” என கோஷமிட்ட மூன்று பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கம் – லெனின் சிலையை திறந்து வைத்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ
மேற்கு வங்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேரணியில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்கள், வன்முறையை தூண்டும் வகையில் முழக்கமிட்டதால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.