Aran Sei

எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜக; மக்கள் பிரச்சினையைக் கண்டுகொள்வதில்லை – ப.சிதம்பரம்

Credit: Hindustan Times

திர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜக, வெள்ள பாதிப்புகளை சரி செய்யவில்லை என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருமாரத்தஹள்ளி-சர்ஜாபுரா அவுட்டர் ரிங் ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகள் இந்த பகுதிகளை கடந்து செல்ல முடியாமல் அவதியுற்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மழைநீர் தேங்கிய மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

‘இப்போது நமக்கு தேவை பாஜக இல்லாத இந்தியாதான்’ – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர் ராவ் கருத்து

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அரசின் நிதியமைச்சருமான ப.சிதம்பரம்,  எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, முதலமைச்சர்களை மாற்றுவது, மக்களை பிளவுப்படுத்துதல், மத சர்ச்சைகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு கர்நாடகாவை ஆளும் பாஜக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால், வெள்ளத்தைப் பொறுத்தவரை, தெய்வீக சக்தியே வெள்ளத்தை ஏற்படுத்தியது, எனவே தெய்வீக சக்தியே தீர்வுகளைக் கண்டுபிடிக்கும்”  என்று பாஜக கூறுவதை போல கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

Madras Hc Judgement on Kallakurichi Case – Tada Rahim | Kallakurichi Case Latest Update | TN CBCID

எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜக; மக்கள் பிரச்சினையைக் கண்டுகொள்வதில்லை – ப.சிதம்பரம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்