விவசாயிகளின் மனக்கசப்பை, கோபமாக மாற்றுவதில் பாஜக பெரும் பங்காற்றுகிறது எனச் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட டிராக்டர் பேரணி கலவரத்தில் முடிந்தது. தடுப்புகளை உடைத்த விவசாயிகள் காவல்துறையினரோடு சண்டையிட்டு வாகனங்களை கவிழ்த்ததோடு, செங்கோட்டையில் நுழைந்து கொடியை ஏற்றியுள்ளனர்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் கணக்கில் ஹிந்தியில் பதிவிட்ட அகிலேஷ் யாதவ் “பாஜக அரசு தொடர்ந்து, விவசாயிகளைப் புறக்கணித்து, அவமானப்படுத்தி, குற்றம் சாட்டி வந்ததே, அவர்களின் மனக்கசப்பு கோபமாக மாறியதில் பெரும்பங்கு வகித்தது. தற்போதைய சூழ்நிலைக்குப் பாஜகவே முழுக்க காரணம்” எனத் தெரிவித்தார்.
भाजपा सरकार ने जिस प्रकार किसानों को निरंतर उपेक्षित, अपमानित व आरोपित किया है, उसने किसानों के रोष को आक्रोश में बदलने में निर्णायक भूमिका निभायी है. अब जो हालात बने हैं, उनके लिए भाजपा ही कसूरवार है.
भाजपा अपनी नैतिक ज़िम्मेदारी मानते हुए कृषि-क़ानून तुरंत रद्द करे. #किसान pic.twitter.com/mXEYl6r2zZ
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 27, 2021
அரசாங்கம், தனது தார்மீக பொறுப்பை கருத்தில் கொண்டு, வேளாண் சட்டங்களைத் திரும்ப்பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.