பாரதிய கிசான் சங்கத்திற்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறி அதிருப்தியடைந்த உறுப்பினர்கள் புதிய அணியை உருவாக்கியுள்ளனர்.
பாரதிய கிசான் யூனியனின் திகாயத் பிரிவில் ஜனநாயகம் இல்லை என்றும் விவசாயிகள் அமைப்பின் வெளிப்படையான அரசியல் மயமாக்கலையும் காரணம் காட்டி கருத்து மோதல் வெடித்தது. அதிருப்தியடைந்த உறுப்பினர்கள் லக்னோவில் பாரதிய கிசான் யூனியன் -அரசியல் சார்பற்றது என்கிற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
பாரதிய கிசான் யூனியனின் நிறுவனரும் மேற்கு உ.பி.யின் மாபெரும் விவசாயித் தலைவரான மகேந்திர சிங் திகாயத்தின் நினைவு நாளுக்குப் பிறகு இப்பிரிவினை நடந்துள்ளது. பாஜகதான் அமைப்பிற்குள் பிரிவினையை ஏற்படுத்தியதாக பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாரதிய கிசான் யூனியனில் பல பிரிவுகள் இருந்தாலும், இப்பகுதியில் ஒன்றிய அரசு கொண்டு வந்த முன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை நடத்தியது திகாயத் பிரிவுதான்.
விவசாயிகள் போராட்டத்தின்போது அரசுக்கு ஆதரவாக இருந்த கதாவாலா காப் தலைவர் ராஜேந்திர சிங் மாலிக்கை புதிய அமைப்பின் தலைவராக/புரவலராக நியமித்துள்ளனர் . ”பாரதிய கிசான் யூனியனின் துணைத் தலைவராக இருந்த விவசாயி தலைவர் ராஜேஷ் சிங் சவுகான் புதிய அமைப்புக்கு தலைமை தாங்குவார். விவசாயிகள் இயக்கத்தில் இருந்து பாரதிய கிசான் யூனியனின் விலகிச் சென்றதால், நாங்கள் நிர்பந்தத்தின் பேரில் முடிவெடுக்க வேண்டியதாயிற்று,” என்று சௌஹான் கூறியுள்ளார்.
விவசாயிகள் இயக்கம் என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்துவதை ஆதரிக்கவில்லை என்று மாலிக் கூறியுள்ளார். ஒன்றிய, மாநில அரசுகளின் உதவி இல்லாவிட்டால் விவசாயிகளின் வாழ்க்கை இன்னும் கடினமாகிவிடும். என்று தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ராஜ்வீர் சிங், தி இந்துவிடம் கூறுகையில் , விவசாயச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இருந்தும், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மேலும் நீட்டுவதில் அர்த்தமில்லை. “பாரதிய கிசான் யூனியன் எப்போதும் விவசாயிகளின் பிரச்சனையில் நிற்கிறது. ஆனால் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்தது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பேஎதிர்க்கட்சிகளின் ஊதுகுழலாக திகாயத்தின் கீழ் உள்ள பாரதிய கிசான் யூனியன் இருந்தது. இது எங்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
`டான்’ – லும்பன் கலாச்சாரம், மாணவர் அரசியல், முதல் தலைமுறை பட்டதாரிகள் – ஒரு பார்வை
சங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் முடிவு செய்தவர்கள் காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக அரசியல் மயமாக்கல் மற்றும் சங்கத்திற்குள் ஜனநாயகம் இல்லை என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்று ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
“கடந்த இரண்டு நாட்களாக நாங்கள் அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க முயற்சித்து வருகிறோம். ஆனால் அவர்கள் பிரிந்து சென்றுவிட்டனர். எங்களால்(பாரதிய கிசான் யூனியன்) அச்சுறுத்தலுக்கு ஆளான அரசாங்கம்; புல்டோசர் மற்றும் நில அபகரிப்பு பயத்தை இந்த மக்களுக்குக் காட்டியது போல் தெரிகிறது, ”என்று அவர் கூறியுள்ளார்.
தொற்று நோய் காலத்தில் அநீதியாக நடத்தப்படும் முறைசாரா தொழிலாளர்கள் – சிவராமன்
வழிதவறிச் சென்றவர்களுடனான தொடர்பைத் துண்டிக்கும் பணியில் பாரதிய கிசான் யூனியன் இருக்கிறது. “அவர்களில் சிலர் எங்களுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளனர். மேலும் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக உழைக்க விரும்பினால் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்” என்று பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.