Aran Sei

தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் ரூ.17 கோடியுடன் பேரம் பேசியுள்ளனர் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க ரூ.17 கோடியுடன் பாஜகவினர் பேரம் பேசியுள்ளார் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

குமாரசாமி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தது பேசுகையில், “பாஜகவினர் பாவத்தால் சம்பாதித்த பணத்தை கொண்டு கர்நாடகாவில் எனது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை கவிழ்த்தனர். இதே போல் பிற மாநிலங்களில் பாவத்தின் பணத்தை கொண்டு எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்தனர்.

சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சி: 3 பேர் கைது

இப்போது தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் அவ்வளவு சுலபமாக அங்குள்ள டி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சியை கவிழ்க்க முடியாது. நேற்று ரூ.17 கோடி பணத்துடன் பாஜகவினர் பேரம் பேசும்போது சிக்கியுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்?.

பிரதமரும், அமலாக்கத்துறையினரும் இதற்கு பதிலளிக்க வேண்டும். அந்த பணம் எங்கிருந்து எப்படி வந்தது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அரசியல் சாசனத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாஜக செல்லும் பாதை சரியானது அல்ல. இத்தகைய முயற்சி அந்த கட்சியையே திருப்பித் தாக்கும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Source : the hindu

ஆட்டுக்குட்டியின் குரங்குச் சேட்டை | குட்டி கரணம் அடிக்கும் சங்கிகள் | Aransei Roast | AnnamalaiBJP

தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் ரூ.17 கோடியுடன் பேரம் பேசியுள்ளனர் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்