Aran Sei

வாக்குச்சாவடி முகவர்களுக்கே பாஜகவில் திண்டாட்டம் – வெளியான பாஜக தொண்டர்களின் தொலைப்பேசி உரையாடல்

மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில்  திரிணாமுல்  காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் வெளியாகியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகிப் பாஜகவில் இணைந்த சுவேது அதிகாரியின் தொண்டர் ஒருவரிடம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர சொல்லும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி உரையாடல் வெளியானதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய யோகி ஆதித்யநாத் – திரிணாமூல் கண்டனம்

இந்நிலையில் பாஜக கட்சியைச் சேர்ந்த இருவர்கள் பேசும் சர்ச்சைக்குரிய உரையாடல் ஒன்றும் வெளியாகியுள்ளதாக என்டிடிவி செய்தி கூறுகிறது.

பாஜக கட்சியைச் சார்ந்த ஷிஷிர் பஜோரியா , முகுல் ராய் பேசிய அந்தத் தொலைபேசி உரையாடலில் , “தேர்தல் ஆணையம் மட்டும் எந்தத் தொகுதியைச் சார்ந்தவர் வேண்டுமானாலும் எந்தத் தொகுதியிலும் முகவராக இருக்கலாம் என்று அறிவிக்கவில்லை என்றால் பாஜகவிற்கு வாக்குச்சாவடி முகவருக்குத் திண்டாட்டம் நிலவியிருக்கும் ” என்று கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது

மேற்கு வங்க தேர்தலில் எந்தத் தொகுதியைச் சார்ந்தவரும் எந்த வாக்குசாவடியிலும் முகவராக இருக்கலாம் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

‘விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்’ – சிறப்புக் கூட்டத்தைக் கூட்டும் மேற்குவங்க முதல்வர்

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்குச்சாவடி முகவர்களுக்கே பாஜகவில் திண்டாட்டம் – வெளியான பாஜக தொண்டர்களின் தொலைப்பேசி உரையாடல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்