Aran Sei

‘மத்திய அரசு விவசாய சட்டங்களை விவசாயிகளிடம் கொடுத்து திருத்தம் செய்ய வேண்டும்’ – பாஜக மூத்த தலைவர் பரிந்துரை

த்திய அரசு தான் இயற்றிய மூன்று விவசாய சட்டங்களையும் போராடும் விவசாயிகளிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சவுத்ரி பிரேந்தர் சிங் பரிந்துரைத்துள்ளார்.

நேற்று (பிபிரவரி 16), ஹரியானா மாநிலம் ஜிந்து மாவட்டத்தில் நடைபெற்ற மறைந்த விவசாயிகள் தலைவர் சர் சோட்டு ராமின் பிறந்தநாள் விழாவில் பிரேந்தர் சிங் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்

“மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களையும் போராடும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

‘இந்தச் சட்டங்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம். நீங்கள் உங்களுக்கு ஏற்றாற் போல வடிவமைத்து திரும்பி கொடுங்கள்.’ என்று அவர்களிடம் அரசு கோர வேண்டும். பின்னர், இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். இந்த முறையில் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். என்னுடைய ஆலோசனையை யாராவது (மத்திய அரசில்) ஏற்றுக்கொண்டால், இந்த பிரச்சனை மிகவும் எளிதாக முடியும்.” என்று அவர் பரிந்துரைத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை மஹாராஷ்ட்ராவில் செயல்படுத்த மாட்டோம் – சபாநாயகர் நானா பட்டோல் அறிவிப்பு

“அமெரிக்காவில், 44 ஆண்டுகளுக்கு முன்பு 1,500 டிராக்டர்கள் போராட்டத்தில் வந்து நின்றதற்கே, அமெரிக்க அரசு அதன் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது நடப்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.” என்று இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கான டிராக்டர்கள் போராட்டக் களத்திற்கு வந்ததை  மறைமுகமாக பிரேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்தப் போராட்டம் இப்படியே தொடருமேயானால், ஆட்சியில் உட்கார்ந்திருப்பவர்கள் உட்பட யாருக்கும் எப்பயனும் கிடைக்காது. இந்தப் போராட்டத்தின் வடிவம் மெதுவாக மாறுகிறது. இதுவரை, இதனை விவசாயிகளின் போராட்டமாக மட்டுமே நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், தாங்களும் இச்சட்டங்களால் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்ற நுகர்வோருக்கும் இப்போது அச்சம் எழுந்துள்ளது. இதுவொரு வெகுஜன போராட்டமாக உருவெடுத்துள்ளது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

`கூட்டாட்சிக்கு எதிரானது’ – விவசாயச் சட்டங்களுக்கு எதிராக கிராமசபைகள் தீர்மானம்

போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜகவை சேர்ந்த ஹரியானா மாநில விவசாய துறை அமைச்சர் ஜே.பி.தலாலின் பெயரை குறிப்பிடாமல் பேசிய பிரேந்தர் சிங், “அங்கு சென்றவர்கள் (போராட்டக் களத்திற்கு) ஒரு லட்சியத்திற்காக தியாகிகளாக ஆனார்கள். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. மாரடைப்பாலும் நோய்களாலும் தான் விவசாயிகள் உயிரிழந்ததாக கூறுபவர்கள், குறுகிய மனமுடையவர்களாக இருக்கலாம்.” என்று விமர்சித்துள்ளார்.

ஹரியானா – விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பாஜக தலைவர்

பிரேந்தர் சிங், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது விவசாயிகளின் நலனுக்காக தொடர் முன்னெடுப்புகளை மேற்கொண்ட சர் சோட்டு ராமின் பேரனாவார். பிரேந்தர் சிங்கின் மகன் பிரிஜேந்திர சிங், பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

முன்பிருந்தே, பிரேந்தர் சிங் போராட்டக்காரர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.

‘மத்திய அரசு விவசாய சட்டங்களை விவசாயிகளிடம் கொடுத்து திருத்தம் செய்ய வேண்டும்’ – பாஜக மூத்த தலைவர் பரிந்துரை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்