பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்ட முன்வடிவு, கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆளுநர் முகம்மது ஆரிப் கானுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டி இருந்தார். ஆளுநர் மீது கேரள அரசும் குற்றம் சாட்டி இருந்தது.
பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான மசோதா: கேரள அமைச்சரவை ஒப்புதல்
இந்நிலையில், பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்ட முன்வடிவு கேரள சட்டப்பேரவையில் கடந்த 7-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் ராஜீவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். பல்கலைக்கழக வேந்தரை 3 பேர் கொண்ட குழுத் தேர்வு செய்யும் என்றும், இந்த குழுவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர் என்றும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேந்தராக தேர்வு செய்யப்படுபவர், விவசாயம், கால்நடை மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், சமூக அறிவியல், இலக்கியம், கலை, கலாச்சாரம், சட்டம், பொது நிர்வாகம் என ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கும் கல்வியாளராக இருப்பார் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேந்தரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்றும் மீண்டும் ஒரு முறையோ அல்லது பல முறையோ அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேந்தராக நியமிக்கப்பட்டவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இருந்தால் முன்கூட்டியே அரசுக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவை ஆய்வுக் குழுவின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Source : the print
நான் சொன்னா ஓட்டே போடமாட்டங்க | இதுல ரம்மி விளையாடுவாங்களா? | Arasnei Roast | sarathkumar
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.