மேற்கு வங்க சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் 10 முதல் தொடங்குகிறது. அப்பொழுது முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அனைத்து மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமிக்க ஆறு சட்டதிருத்தங்கள் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
“மேற்கு வங்க பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, பிதான் சந்திர கிரிஷி விஸ்வவித்யாலயா திருத்த மசோதா, விலங்குகள் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள்” என்று மாநில சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி நேற்று (ஜூன் 6) தெரிவித்துள்ளார்.
மேலும் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்று பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க அமைச்சரவை மே 26 அன்று அனைத்து மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. தற்பொழுது பல்கலைக்கழக வேந்தராக மாநில ஆளுநர் இருந்து வருகிறார்.
Source : the hindu
மிரட்டிய அரபு நாடுகள் உதறலில் பாஜக Dr Sharmila Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.