குஜராத் கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பேட்டி பச்சாவ் (பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்) போன்ற வெற்று முழக்கங்களை வழங்குபவர்கள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை காப்பாற்றுகிறார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பிறகு நல்லெண்ண அடிப்படையில் குஜராத் அரசு 11 குற்றவாளிகளை ஆகஸ்ட் 15 அன்று விடுவித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “பேட்டி பச்சாவ் (பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்) போன்ற வெற்று முழக்கங்களை வழங்குபவர்கள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை காப்பாற்றுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தேசிய பணமாக்கல் திட்டம்: 10,000 பி.எஸ்.என்.எல் மொபைல் டவர்களை விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு
இன்று, நாட்டில் பெண்களின் மரியாதை மற்றும் உரிமை பற்றிய கேள்வி எழுந்துள்ளது. பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்” காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Source: ndtv
Kallakurichi Sakthi School unconditional Fight for bail | Ravikumar | Shanthi | Deva’s Update 14
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.