Aran Sei

பில்கிஸ் பானு கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பாஜக தலைவர்களின் கொடூரமான மனநிலையை காட்டுகிறது – சித்தராமையா கண்டனம்

பில்கிஸ் பானு கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்யும் முடிவு பாஜக தலைவர்களின் கொடூரமான மனநிலையை காட்டுகிறது என்று கர்நாடக  முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “பில்கிஸ் பானு கொலை வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிளை மன்னித்து விடுதலை செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது பாஜக தலைவர்களின் கொடூரமான மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கே அவமானத்தை ஒன்றிய அரசின் அமைச்சர் அமித்ஷா ஏற்படுத்தியுள்ளார். அவர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மதரஸாவுக்கு செல்லும் மோகன் பகவத் குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை சந்தித்து அவருக்கு நீதி வழங்குவாரா? – ஒவைசி கேள்வி

பாஜக சில சிக்கலான விஷயங்களில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வது துரதிருஷ்டமானது. குஜராத் தேர்தலில் ஓட்டுகளை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்தவர்களை விடுதலை செய்வது ஏற்கத்தக்கது அல்ல. பெண்களின் கவலைகளை தீர்ப்பதை விட பாஜகவுக்கு தேர்தல் தான் மிக முக்கியமாய் தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயாருக்கும் இடையே இருக்கும் அழகான நல்லுறவு மக்களுக்கு தெரியும். ஆனால் பிரதமர் மோடிக்கு 2 குழந்தைகளை இழந்த தாயின் வலி ஏன் புரியவில்லை. குற்றவாளிகளை மன்னிக்கும் இந்த மனிதநேயமற்ற பாஜக அரசின் முடிவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பாஜகவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்மலா சீதாராமன், ஷோபா ஆகியோர் எங்கே போனார்கள்.

குஜராத்; பில்கிஸ் பானு வழக்கு: “நிகழ்ந்த கொடூரத்தை மறக்க முடியவில்லை” – பாதிக்கப்பட்டவரின் கணவர் யாகூப் ரசூல்

பெண்களின் பக்கம் அவர்களால் நிற்க முடியாவிட்டால் அவர்கள் தங்களின் பதவியில் தொடர தகுதியற்றவர்கள். அரசியல் காரணங்களுக்காக பாலியல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதை பார்த்து கொண்டு அவர்களால் அமைதியாக தூங்க முடியுமா? என்று சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

அம்மாவைப் பாத்தா பாவமா இல்லையா? | நாயென நெனைச்சி நரியை வளர்த்த கொடூரம் | Aransei Roast | ADMK | Amma

பில்கிஸ் பானு கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பாஜக தலைவர்களின் கொடூரமான மனநிலையை காட்டுகிறது – சித்தராமையா கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்