2002 ஆண்டு குஜராத் கலவரத்தின் போது தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டதை ஊடகங்களில் அறிந்து ஆச்சரியமடைந்ததாக பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சமீபத்திய முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பி.டி.ஐ- செய்தி நிறுவனத்திடம் யாகூப் ரசூல் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவரும், அவருடைய மகன்களும் நிலையான முகவரி இல்லாமல் தொடர்ந்து வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.
குஜராத்: பில்கிஸ் பானு வழக்கு – குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்த பாஜக அரசு
குஜராத் அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க அனுமதித்ததை அடுத்து, 11 குற்றவாளிகள் சுதந்திர தினத்தன்று கோத்ரா துணைச் சிறையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்
ஜனவரி 21, 2008 அன்று மும்பையில் உள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நீதிமன்றம், பில்கிஸ் பானோவின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் அவர்கள் மீதான தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ஊடகங்களில் இருந்து தெரிந்து கொண்டேன் என்று ரசூல் தெரிவித்துள்ளார்.
“தண்டனை விதிக்கப்பட்டவர்களின் விண்ணப்பத்தை எப்போது பரிசீலித்தார்கள்; மாநில அரசு எந்தத் தீர்ப்பை பரிசீலித்தது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை, இதைப் பற்றி சொல்லப்படவில்லை. இதைப் பற்றி நாங்கள் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களை கொன்ற குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் அரசு – எஸ்.டி.பி.ஐ கண்டனம்
அரசாங்கத்தின் முடிவிற்கு அவரது எதிர்வினை பற்றி கேட்டதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“இதுபற்றி நாங்கள் எதுவும் கூற விரும்பவில்லை. விவரம் கிடைத்த பிறகுதான் பேச முடியும். கலவரத்தில் உயிரிழந்த எங்கள் மகள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பது மட்டுமே எங்களுடைய வேலை” என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு குஜராத் அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கியதாக ரசூல் கூறியுள்ளார் .
ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அரசு வேலை அல்லது வீடுக்கான எந்த ஏற்பாடுகளையும் இதுவரை செய்யவில்லை. நிலையான முகவரி இல்லாமல் குடும்பம் மறைந்து வாழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
“எங்களிடம் இன்னும் நிலையான முகவரி இல்லை, நாங்கள் வசிக்கும் இடத்தைப் பற்றி இன்னும் பேச முடியாது, அவ்வாறு செய்வது எங்களுக்கு மிகவும் கடினம். இழப்பீட்டுத் தொகையை எனது மகன்களின் கல்விக்காக பயன்படுத்தி வருகிறேன்.
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச் செயலில் ஈடுபட்ட ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்த்தக்கது.
நித்தியானந்தா மாதிரி தனி இந்து நாடா? Aransei Debate | Hindu Rashtra vs India | Senthil | Magizhnan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.