பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ரந்திக்பூர் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தேவ்கத் பாரியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் (இஸ்லாமியர்கள்) திரும்பி வருவார்கள் என்று கூறியுள்ளனர்
குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்குமாறு குஜராத் அரசாங்கத்தை புலம்பெயர்ந்த கிராம மக்கள் வலியுறுத்தினர். மேலும், தங்கள் கிராமத்திற்குத் திரும்ப காவல்துறை பாதுகாப்பு கோரியுள்ளனர்.
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் – ஜேஎன்யு துணை வேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்
பில்கிஸ் பானுவும் அவரது குடும்பமும் வசிக்கும் தேவ்கத் பாரியா கிராமத்திற்கு சென்று பார்த்தபோது ரந்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்போது தேவ்கத் பாரியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
சமீர் காச்சி என்பவர் ரந்திக்பூர் கிராமத்தை விட்டு வெளியேறி தேவ்கத் பரியாவில் உள்ள தனது மாமாவின் இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
வாகனங்கள் விற்பனை செய்யும் சமீர் காச்சி கூறுகையில், “பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மற்றும் கொலையாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து எங்களுக்கு முதலில் தெரியாது. கிராமத்திற்குத் திரும்பியதும், அவர்கள்(குற்றவாளிகளுக்கு ஆதரவாளர்கள்) பட்டாசு வெடித்தும், இசையமைத்தும் கொண்டாடினர். அப்போதுதான் எங்களுக்கு பயம் வந்தது. நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு இங்கு தேவகத் பரியாவிற்கு குடிபெயர முடிவு செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.
சாதி கடந்து திருமணம் செய்ததற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது கூடாது – நீதிமன்றம் உத்தரவு
“11 குற்றவாளிகளையும் மீண்டும் சிறையில் அடைக்கவும், பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்கவும் நாங்கள் தாஹோத் கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளோம். அது நடக்கவில்லை என்றால், நாங்கள் எங்கள் கிராமத்திற்குத் திரும்பப் போக போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
11 குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்கவும், பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்கவும் கோரி 55 பேர் கையெழுத்திட்டு தாஹோத் கலெக்டரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான மனு – ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு
மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த இக்பால் அப்துல் கூறுகையில், “வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்காத வரை, எங்களுக்கு சரியான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் வரை, நாங்கள் ரந்திக்பூருக்கு திரும்ப மாட்டோம். எங்கள் வாழ்க்கை மற்றும் வணிகம் பாதிக்கப்படுகிறது. நாங்கள் ஆதரவற்றவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Source: indiatoday
Kallakurichi Sakthi School Girl Second Post Mortem Results – Advocate Rajinikanth | Kallakurichi BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.