“ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கானது. பில்கிஸ் பானு வழக்கு என்பது அரிதினும் அரிதான வழக்கு. இது மரண தண்டனைக்கு தகுதியான வழக்கு. அதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றால் அது ஆயுள் முழுமைக்குமானது. அதில் மன்னிப்புக்கு இடமில்லை” என்று திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மௌவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
“எந்த நியாயமான காரணமும் இல்லாமல் 11 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாலை, இனிப்புகளோடு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மகளிரணியினரின் அளந்து வடிக்கும் கண்ணீர் என்பது வெறும் ஏமாற்று வித்தை” என்று மௌவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுக்களுடன் திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். மௌவா மொய்த்ராவும் கூடுதலாக ஒரு பொதுநல மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் குஜராத் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற்று வந்தநிலையில் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு 11 பேரையும் விடுவித்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து விடுதலையை எதிர்த்து சமூக ஆர்வலர் சுபாஷினி அலி, பத்திரிக்கையாளர் ரேவதி லால் மற்றும் பேராசிரியர் ரூப் ரேகா வர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு இன்று(ஆகஸ்ட் 25) விசாரித்தது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக குஜராத் அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2002இல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உள்பட 14பேர் ன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு வழக்கு தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 2008இல் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 15அன்று குற்றவாளிகள் 11 பேர் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : india today
தோசை மாவை புளிக்க வைக்க முடியுமா? | வில்லேஜ் விஞ்ஞானி சீமான் கேள்வி | Aransei Roast | seeman | NTK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.