பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலையானது மனித குலத்திற்கே அவமானம் என பாஜக செயற்குழு உறுப்பினரும் திரைக்கலைஞருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும், அவரது குடும்பத்தினர் 7 பேரையும் ஒரு கும்பல் தாக்கியது. அந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில் பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அந்த கும்பல் அவரைத் தாக்கியதோடு மட்டுமின்றி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது. அதோடு பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயது குழந்தை உள்பட 7 பேரையும் கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தங்களின் தண்டனையை குறைக்க அல்லது ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பவம் குஜராத்தில் நடந்ததால் இதுகுறித்து குஜராத் அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தது.
ஹத்ராஸ் வழக்கு – பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு
இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த குற்றவாளிகளை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்தது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் பாஜக செயற்குழு உறுப்பினரான குஷ்பு இதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் பயத்துடனே வாழும் பெண்ணுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும். அத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்யப்படக்கூடாது. அப்படி விடுவிக்கப்பட்டால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம் ஆகும். பில்கிஸ் பானு மட்டுமில்லை எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பார்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நான் நிர்பயாவை அனுமதித்த கட்சியில் இருந்தேன். அதைவிட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது. குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதித்துறைதான். ஆனால், பாஜக மீதும், நமது பிரதமர் மீதும் நீங்கள் கொண்ட வெறுப்புதான் உங்களை பேச தூண்டியது என்று நினைக்கிறேன். உங்களுக்கு என் அனுதாபங்கள். இதில் அரசியல் வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு யோசியுங்கள் என்று பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
Farmers protest in Delhi infiltrated by RSS and BJP | K Balakrishnan Interview | Haseef | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.