2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது குஜராத் அரசு விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற்று வந்தநிலையில் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு 11 பேரையும் விடுவித்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
பீகார்: கோயிலுக்குச் சென்ற இஸ்லாமிய அமைச்சர் மீது எஃப்ஐஆர் பதியக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து விடுதலையை எதிர்த்து சமூக ஆர்வலர் சுபாஷினி அலி, பத்திரிக்கையாளர் ரேவதி லால் மற்றும் பேராசிரியர் ரூப் ரேகா வர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு இன்று(ஆகஸ்ட் 25) விசாரித்தது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக குஜராத் அரசு விளக்கமளிக்கு வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தது மனித குலத்திற்கே அவமானம் – பாஜக உறுப்பினர் குஷ்பூ
கடந்த 2002இல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உள்பட 14பேர் ன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு வழக்கு தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 2008இல் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 15அன்று குற்றவாளிகள் 11 பேர் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: ndtv
Farmers protest in Delhi infiltrated by RSS and BJP | K Balakrishnan Interview | Haseef | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.