Aran Sei

பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு – அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் நிதிஷ் குமார் முடிவு

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெறும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மே 27-ம் தேதி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத செய்திகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது. “பல கட்சிகள் அந்தத் தேதிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தரப்பினரின் சம்மதமும் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் எல்லா கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், “சட்டமன்றத்தின் இரு அவைகளும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக இரண்டு முறை தீர்மானங்களை நிறைவேற்றியதால் எந்த பிரச்சனையும் இருக்காது” என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

கியான்வாபி மசூதி வழக்கு – தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்த மாவட்ட நீதிமன்றம்

தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நரேந்திர மோடி அரசு மறுத்ததைத் தொடர்ந்து பாஜகவின் சமீபத்திய அலட்சியப்போக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற எதிர்க் கட்சிகளிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. உயர் சாதியினரிடமிருந்து ஆதரவைப் பெற்று அனைத்து சாதியினரிடமிருந்தும் ஆதாயங்களை எதிர்பார்க்கும் பாஜக  இதர பிற்படுத்தப்பட்டவர்களை பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அசாம் காவல் மரணம் – காவல் நிலையத்துக்கு தீ வைத்தவர்கள் இஸ்லாமியர்கள் எனக் குற்றஞ்சாட்டிய பாஜக

ஒன்றிய அரசு “நடைமுறைக் காரணங்களுக்காக” சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாவிட்டாலும், “ஒருபோதும்” சாதிக் கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை என்று பீகார் மாநில பாஜகவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Source: thenewindianexpress

Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush Interview

பீகார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு – அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட  முதல்வர் நிதிஷ் குமார் முடிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்