ராணுவத்திற்கு குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் போராட்டம் நடைபெற்றுள்ளது. கொளுத்தும் வெயிலைத் பொருட்படுத்தாமல் ஜெகனாபாத், நவாடா மற்றும் சஹர்சா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வேலையில்லா இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபாத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்
இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்ள்களில் ஆன்லைன் முறையில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவீத வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
டெல்லி காவல்துறை என்னை கொடுரமாக துன்புறுத்தியது – ஜோதிமணி குற்றச்சாட்டு
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. நவாடா நகரில் உள்ள பிரஜாதந்த்ரா சௌக் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தை வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்ற அவர்கள், தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் செய்துள்ளனர். இதன் விளைவாக, ஹவுரா-கயா எக்ஸ்பிரஸ் மற்றும் கயா-கியுல் பயணிகள் உட்பட பல ரயில்களின் இயக்கம் தடைசெய்யப்பட்டது.
நவாடா துணைப்பிரிவு உமேஷ் குமார் பார்தி மற்ற அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றுள்ளார்,
காவல்துறை அதிகாரி உபேந்திர பிரசாத் கூறுகையில், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தவும், போக்குவரத்தை மீட்டெடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமையைச் சமாளிக்க கூடுதல் படைகளை நாடியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சஹர்சா மற்றும் ஜெகனாபாத் மாவட்டங்களில் வேலை இல்லாத இளைஞர்களால் இதேபோன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட அதிகாரிகள் ஆயுதம் தாங்கிய காவல் படைகளை குவித்துள்ளனர். போராட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் பரவி வருவதால், மாநில காவல்துறை தலைமையகம் அனைத்து காவல் அதிகாரிகளையும் எச்சரித்துள்ளது. அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்தால் பணியமர்த்தப்பட்டவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டும் பணி நீட்டிப்பு வழங்கினால் பிறரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகள் ஆட்சேர்ப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போது தற்காலிக பணிக்காக ஆட்சேர்ப்பு செய்வது தங்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்று வேலையில்லா இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“பாரதி தோ யா ஆர்த்தி செய்’ (எங்களை ஆட்சேர்ப்பு செய்யுங்கள் அல்லது கொல்லுங்கள்) என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
“தொற்றுநோய் காரணமாக இளைஞர்கள் இரண்டு வருடங்களை இழந்துவிட்டதால் வயது வரம்பை இராணுவம் உயர்த்த வேண்டும்” என்று ஒரு போராட்டக்காரர் ஒருவர் கூறியுள்ளார்.
“அரசு எங்களுடன் PUBG போன்ற ஒரு விளையாட்டை விளையாடுகிறது,” என்று ஒரு போராட்டக்காரர் கேலி செய்துள்ளார். அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பழைய ஆள்சேர்ப்பு நடைமுறையை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் போராடியுள்ளனர்.
Source: The New Indian Express
‘அதானிக்கே கொடுங்க’ – கட்டாயப்படுத்திய மோடி | இலங்கையில் நடந்த களேபரம் | Modi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.