பீகாரில் ஆசிரியர் பணி நியமனம் தாமதப்படுத்தப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை கூடுதல் ஆட்சியர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
2011 முதல் 2019 வரை மூன்று முறை நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு (STET) மற்றும் 2011 முதல் இரண்டு முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆகியவற்றில் தகுதி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கு பணிநிய்ந்மனம் செய்யக் கோரி கோரிக்கை வைத்து வருகின்றனர். 165,000 ஆசிரியர்களை நியமிக்க மற்றொரு ஆட்சேர்ப்பு இயக்கத்தை மேற்கொள்வதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பீகார் அரசு உறுதியளித்தது, ஆனால் தொடர்ந்து தாமதம் செய்வதால் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி – இஸ்ரோ தலைவர் கருத்து
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற பாட்னா கூடுதல் ஆட்சியர் கே.கே.சிங், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க உத்தரவிட்டார். அப்போது தேசியக்கொடியுடன் படுத்து போராட்டம் நடத்திய இளைஞரை கூடுதல் ஆட்சியர் கொடூரமாக தாக்கினார்.
இளைஞர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறிருந்தால் கூடுதல் ஆட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கூறியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் 91,000 காலியிடங்களுக்கு 42,000 ஆசிரியர்களை மட்டுமே நியமனம் செய்யமுடிந்தது. பல்வேறு பாடங்களில் ஆசிரியர்களை இடஒதுக்கீடு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இல்லாததால் காலதாமதம் ஏற்பட்டதாகக் கல்வித்துறை கூறியுள்ளது.
பிடிஆர் விட்ட டோஸ் | கதி கலங்கிய ஒன்றியம் | Maruthaiyan | PTR Palanivel Thiagarajan | DMK | Periyar
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.