Aran Sei

பீகார்: அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு – ஒன்றிய அரசுக்கு எதிராக போராடும் இளைஞர்கள்

பீகாரில் புதிய ராணுவ ஆள்சேர்ப்பு கொள்கையான அக்னிபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் ரயிலின் 2 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபாத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்ள்களில் ஆன்லைன் முறையில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.

4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவீத வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

எதிரிகளை அழிப்பதற்காக ஹிட்லர் கட்டிய நச்சு வாயு அறைகளை மட்டும் தான் ஒன்றிய அரசு இன்னும் கட்டவில்லை: சிவசேனா விமர்சனம்

இந்நிலையில் இத்திட்ட்த்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் ஹாஜிபூர்-பரவுனி ரயில் பாதையின் மொஹியுதிநகர் நிலையத்தில் தீவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும்,  இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்புகளைத் தொடர்ந்து அக்னிபாத் ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு இப்போது 21ல் இருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Source: ndtv

எச்சரிக்கை I நெருங்கும் காவி இருள் I தாமதித்தால் ஆபத்து I Maruthaiyan Interview

பீகார்: அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு – ஒன்றிய அரசுக்கு எதிராக போராடும் இளைஞர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்